Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீட் தேர்வு: குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் முயற்சியில் தமிழக அமைச்சர்கள்

In இந்தியா
Updated: 05:14 GMT, Jul 20, 2017 | Published: 05:14 GMT, Jul 20, 2017 |
0 Comments
1094
icon_com
This post was written by : Risha
neet_exame_3101889_3103808f

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டமூலத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுக் கொள்ளும் வகையில், தமிழக அமைச்சர்கள் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

அதன்படி, இன்று (வியாழக்கிழமை) மத்திய சுகாதாரத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதன்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டமூலத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை வலியுறுத்துவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அமைச்சர்களான ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகியோர் டெல்லிக்கான குறித்த விஜயத்தில் பங்குபற்றியுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg