Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி- ராஜாஜி மார்க் இல்லத்தில் குடியேறவுள்ளார் பிரணாப் முகர்ஜி

In இந்தியா
Updated: 08:21 GMT, Jul 20, 2017 | Published: 05:28 GMT, Jul 20, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Risha
Pranab Mukherjee

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஓய்விற்கு பின்னர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வசித்த டெல்லி, ராஜாஜி மார்க் இல்லத்தில் குடியேறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் 24ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில், அவரது ஓய்விற்கு பின்னர் அவருக்கு வழங்கப்படும் வசதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகளின்படி, குடியரசு தலைவரின் தற்போதைய மாதத்திற்கான ஊதியத் தொகையின் பாதியான 75 ஆயிரம் ரூபா ஓய்விற்கு பின்னர் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், மின் கட்டணம், குடிநீர் கட்டணம், இணையத்தள இணைப்புடன் கூடிய தொலைப்பேசி வசதி, குண்டுதுளைக்காத கார், பாதுகாப்பு ஊழியர்கள் ஆகிய வசதிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக முதல் வகுப்பில் இலவசமாக பயணிப்பதற்கும், இலவச மருத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg