Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தங்கம் கடத்தியவர்கள் விமான நிலையத்தில் கைது!

In இலங்கை
Published: 09:10 GMT, Jul 20, 2017 |
0 Comments
1236
icon_com
This post was written by : Vithushagan
gold-bars-720x450

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜைகள் இருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) குறித்த விமானநிலையத்தில் யு.எல்.139 என்ற விமானத்தின் ஊடாக 199.6 கிராம் மற்றும் 295.95 கிராம் நிறையுடைய 2,727,505 ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை  தண்டப்பணம் செலுத்திய பின்னர் விடுவிக்குமாறு பிரதி சுங்கப் பணிப்பாளர்  உத்தரவிட்டதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg