Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்தில் வன்முறைக் குற்றங்கள் அதிகரிப்பு

In
Updated: 10:52 GMT, Jul 20, 2017 | Published: 10:51 GMT, Jul 20, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Elakkiya
_97014008_gettyimages-157402733

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த ஆண்டில் வன்முறை தொடர்பான குற்றங்கள் 18 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் பதிவுகளின் பிரகாரம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இத்தகைய குற்றங்கள் 10 சதவீதம் அதிகரிப்பை காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இவற்றில் 16 சதவீத அதிகரிப்பு கொள்ளைச் சம்பவங்களாகவும் 14 சதவீத அதிகரிப்பு பாலியல் குற்றங்களாகவும் பதிவாகியுள்ளன.

தேசிய புள்ளிவிபரவியல் அலுவலக தகவல்களின் பிரகாரம் கடந்த ஆண்டில் சுமார் 5 மில்லியன் குற்றங்கள் பொலிஸாரால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 21 அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதேவேளை தனிநபருக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 60 ஐ எட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg