Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய தலைநகரையே ஸ்தம்பிதமடையச் செய்தது கடும் மழை

In இந்தியா
Published: 10:20 GMT, Jul 20, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Risha

கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மாத்திரமின்றி, தலைநகர் டெல்லியும், தேசிய தலைநகரை அண்மித்த பிராந்தியங்களும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) சில மணிநேரங்கள் நீடித்த மழையினால் டெல்லியை அண்மித்த காஸியாபாத் நகர் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. மழையினால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டதனால், பயணிகள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, டெல்லியில் இன்று காலைவரை 25.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் பருவமழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது என்பது வழமையானது. எனினும், முறையற்ற வடிகால் வசதிகள், கட்டுப்பாடற்ற நகர்ப்புற விரிவாக்கம் என்பவற்றால் பாதிப்பு மோசமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg