Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அவசரகால நிலைமை நீடிப்பு

In கனடா
Published: 11:33 GMT, Jul 20, 2017 |
0 Comments
1094
icon_com
This post was written by : Anojkiyan
boung

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டுக்கடங்காது எரிந்துவரும் காட்டுதீயினால் அவசரகால நிலைமை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரிட்டிஷ் கொலம்பியாவின் புதிய முதல்வர் ஜோன் ஹோர்கன் வெளியிட்டுள்ளார்.

இந்த காட்டுத்தீ காரணமாக ஏற்கனவே 45,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவைப்பதே தமது முதற்கட்ட கடமையாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்கள் 14நாட்களைக் கடந்திருந்தால் அவர்களுக்கு 600 டொலர்கள் உதவித் தொகை வழங்கப்படும் எனவும், கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 100 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg