Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுணதீவில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

In இலங்கை
Published: 11:40 GMT, Jul 20, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Vithushagan
4

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கிராமத்தில் முழுமையான டெங்கு ஒழிப்பு சிரமதானம்  இன்று ( வியாழக்கிழமை ) நடை பெற்றது.

தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிகை  தங்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக வவுணதீவு பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தெரிவித்தார்.

முழுமையான கிராம தூய்மையாக்கும் பணியில் பொது இடங்கள், பாதை மருங்குகள், மைதானம், ஆலயங்கள், வாய்க்கால்கள் என்பன சிரமதானம் செய்யப்பட்டன.

குறித்த சிரமதான பணியில் ஈச்சந்தீவு முதியோர் சங்கம், கிராம மட்ட அமைப்புக்கள், மகளிர் சங்கம் ஆகியவற்றின் அங்கத்தவர்களும் கிராம மக்களும் சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

8 (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg