Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி!: ராம்நாத் கோவிந்த்

In இந்தியா
Updated: 13:01 GMT, Jul 20, 2017 | Published: 13:00 GMT, Jul 20, 2017 |
0 Comments
1161
This post was written by : Risha
Rama

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று பா.ஜ.க. சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட  ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது பணியினை தான் சிறப்பாக செய்ய முயற்சிப்பதாகவும், ஜனாதிபதி பதவிக்கு என்று உள்ள கண்ணியத்தின் படி நடந்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், 2017ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமாரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அதன்படி இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தெரிவானார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg