Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:06 GMT, Jul 20, 2017 | Published: 16:06 GMT, Jul 20, 2017 |
0 Comments
1254
This post was written by : Sivaguru Siva

உலகின் மிக முக்கிய நாசகார பாதாள உலக இணையத் தளங்களான அல்பாபே, மற்றும் ஹன்சா ஆகியன அமெரிக்க -ஐரோப்பிய காவற்துறைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கையில் நிரந்தரமாக  மூடப்பட்டுள்ளன

மேற்படி இணையத்தளங்கள் இரண்டும் போதைப்பொருள், ஆயுதங்கள் நாசகார மென்பொருள்கள், திருடப்பட்ட மின்னியல் தரவுகளை விற்பனைசெய்வதற்கு உதவி செய்யும் பாதாள உலகத்தளங்களாகும்.

அமெரிக்காவின் எப் .பி .ஐ மற்றும் ஐரோப்பாவின் யூரோபோல் உட்பட்ட முக்கிய அமைப்புகளின் கடும் முயற்சியினால் இந்தமாத ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கபட்டது.

இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக அல்பா  பே யின் நிர்வாகியான 26 வயதான கனேடியர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் நாக்கு லம்போகினி ஆடம்பர வாகனங்கள் உட்பட மில்லியன் கணக்காக சொத்துகளும் கைப்பற்றப்பட்டன.

ஆயினும் தாய்லாந்து காவற்துறையின் தடுப்புக்காவலில்  மேற்படி கனேடியர் கடந்த ஐந்தாம் திகதி தற்கொலை செய்தமை சுட்டிக் காட்டத்தக்கது.

_97018236_fbbc2929-ec62-4733-ab5e-323bb74334e6

பிரெசெல்சில் கடந்த திங்களன்று ஆரம்பமான இரண்டாம்கட்ட பிரெக்ஸிற்பேச்சுகள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்டவில்லையென்பதை இன்று இரண்டுதரப்புகளும் பிரெசெல்சில் நடத்திய ஊடக மாநாடு புலப்படுத்தியுள்ளது.

குறிப்பாக பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியக்குடிமக்கள் மற்றும் ஐரோப்பியஒன்றியநாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்களின் எதிர்காலம் குறித்து இன்னமும் இரண்டுதரப்பும் உறுதியான உடன்பாடுகளை எட்டவில்லை.

இதேபோலவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரித்தானியா செலுத்தவேண்டிய கட்டணத்தொகை குறித்தும் உடன்பாடு எட்டப்படவில்லை.

பிரித்தானியாவின் பிரெக்சிற்அமைச்சர் டேவிட் டேவிஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியபேச்சுக்குழுத்தலைவர் மிசேல் பார்னியர் ஆகியோர் இந்த ஊடக மாநாட்டை நடத்தினர்.

பிரெக்ஸிற் நகாவுகள் குறித்து இரண்டு தரப்பும் ஒவ்வொருமாதமும் நான்கு நாட்களுக்கு சந்தித்துப் பேசுவதென உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

_97011339_5c247776-2558-4817-b407-672396aa4a1b

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு இருந்ததான சாச்சை தொடர்பாக டொனால் ரம்பின் மூத்த மகன் அவரது மருமகன் மற்றும் அவரத முன்னாள் பரப்புரை செயலாளர் ஆகியோர் அமெரிக்க செனட் குழு முன்னால் சாட்சியமளிக்கவுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டுகள் குறித்து மேற்படி மூவரிடமும் செனட் குழு வினாக்களைத் தொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_97010714_aboriginal

ஒஸ்ரேலியாவின் பூர்வீக குடிகளான அபோர்ஜிய மக்கள் ஒஸ்ரேலியக் கண்டத்தில் சுமார் 65.000 வருடங்களாக வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்களை அகழ்வாராட்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

தற்போது வெளிப்பட்டுள்ள இந்தத் தரவுகள் முன்னைய தரவுகளை விட சுமார் 18.000 வருடங்கள் அதிகமாக அவர்கள் ஒஸ்ரேலியாவில் வாழ்ந்து வருவதைப் புலப்படுத்தியுள்ளது.

தற்போதைய அகழாய்வுகளில் அபோர்ஜிய மக்களின் புராதன வாழ்விடம் மற்றும் அவர்கள் பயன்படுத்தியபொருட்களும் கிடைத்துள்ளன.

உலகின் புராதன மக்கள கூட்டத்தில் அபோர்ஜியர்களும் உள்ளடங்குகிறார்கள்.

_97008598_mediaitem97008597

பிரித்தானியாவின் லிப்டெம் எனப்படும் லிபரல் டெமகிறட் கட்சியின் புதிய தலைவராக சேர்.வின்ஸ் கேபிள் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவப் போட்டியில் சேர் வின்ஸ் கேபிளுக்கு எதிராக யாரும் போட்டியிடாததால் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

74 வயதான சேர். வின்ஸ் கேபிள் ருவிக்ஹெனம் பகுதி நாடாளுமன்ற உறுப்பினராவார்.

_96569387_040171578-1

குடியரசுத்தலைவராக வரவேண்டுமென தான் ஆசைப்பட்டதில்லையென தனது வெற்றிக்குப்பின்னர் இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்

கடமையை நேர்மையாக ஆற்றுவோருக்கு தனது வெற்றியே ஒரு செய்தியெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ராம்நாத் கோவிந்தின் வெற்றியானது ஏழை, நலிவுற்றவர்கள், விளிம்புநிலைமக்கள் ஆகிய தரப்புகளின் கனவுகளுக்கும் ஆசைகளுக்கும் கிடைத்த வெற்றியென பாரதியஜனதாக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg