Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கமல்ஹாசன் கூறியது உண்மை : அன்புமணி ராமதாஸ்

In இந்தியா
Updated: 03:11 GMT, Jul 21, 2017 | Published: 03:11 GMT, Jul 21, 2017 |
0 Comments
1245
This post was written by : Surenth

தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மை என பா.ம.க. இளைஞர் அணித் தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் கூறுவது போல தமிழகத்தின் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருக்கிறது என்றும் அதை எதிர்க்கின்றவர்கள் ஊழல் நடக்கவில்லை என்பதை நிரூபித்து காட்ட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டிருந்தார்.

மேலும், கமலஹாசன் வெளியிட்டிருந்த கருத்து தவறு எனக் கூறுகின்றவர்களின் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தெளிவாக குறிப்பிடுகின்றேன் என அவர் தெரிவித்திருந்தார்.

தமிழகம் தற்போது எல்லா வகையிலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது எனவும் குறிப்பாக ‘நீட்’ முறைமையின் ஊடாக தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது எனவும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg