Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்தவாஸ் நியமனம்

In கிாிக்கட்
Published: 03:56 GMT, Jul 21, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Anojkiyan
nuwn

இந்திய அணிக்கெதிரான தொடருக்காக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த சம்பக ராமநாயக்க தனது பதவியிலிருந்து விலகியதையடுத்தே சமிந்தவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சமிந்தவாஸ் 355 விக்கெட்டுகளையும், 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளையும், 6 ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் மற்றும் ஒரு ரி-ருவென்ரி போட்டி கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg