Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனவாதத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது: JVP

In இலங்கை
Published: 04:34 GMT, Jul 21, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Ravivarman
JVP-720x480

மீண்டும் நாட்டில் இனவாதத்தை பலப்படுத்தி இனவாதத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிஷ இளைஞர் அமைப்பு நேற்றையதினம் (வியாழக்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் இணைப்பாளர் எரங்க குணசேகர தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதமும் பழிவாங்கல் செயற்பாடுமே கறுப்பு ஜூலைக்கு காரணமாகும். அன்று செய்த அதே தவறை இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி செய்து வருகின்றது.

யுத்தத்திற்கு அப்பால் சென்று ஒரு பலமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் தற்போது இருக்கின்றன.
ஆனால் அரசாங்கம் இந்த விடயங்களில் மௌனமாக இருப்பதுடன், பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

உமா ஓயா, டெங்கு நோய், சைட்டம், தொழிலாளர், விவசாயிகள் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இவற்றில் தீர்வை பெற்றுக் கொடுக்காது சுயநல அரசியல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழர்களோ, சிங்களவர்களோ அனைவரும் இலங்கையர்கள் என்ற நிலைமைக்கு வரவேண்டும். ஆகவே மக்கள் இப்போது தெளிவாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என எரங்க குணசேகர மேலும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg