Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல்தர அணியை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பது எங்களுக்கு தெரியும்: உபுல் தரங்க

In கிாிக்கட்
Published: 05:08 GMT, Jul 21, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Anojkiyan

தரவரிசையில் முதலாமிடத்திலுள்ள இந்திய அணியுடன் எவ்வாறு விளையாட வேண்டுமென எமது வீரர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த காலத்தில் தரவரிசையில் முன்னணியில் திகழந்ம அவுஸ்ரேலிய அணியுடன் எவ்வாறு விளையாடி 3-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதேபோல் தற்போதைய நம்பர்-1 அணியுடன் விளையாட முடியும்

சிம்பாப்வே அணியுடனான கடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றோம். சிம்பாப்வே அணி அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியது. இருந்தாலும் டெஸ்ட் போட்டியை நாம் கடுமையாக போராடி வெற்றிபெற்றோம். அதுவும் பாரிய வெற்றி இலக்கை துரத்தியடித்து வெற்றிபெற்றோம். இதிலிருந்து எமது வீரர்களின் மன உறுதி வெளிப்பட்டுள்ளது.

எனவே இத் தொடரில் நன்றாக விளையாடி நாம் எந்ந நிலையிலுள்ளோமென எமது நிலையை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறு நாம் வேகப்பந்துவீச்சுகளுக்கு முகங்கொடுப்பதென அனைத்து விதமான பயிற்சியாளர்களுடன் கலந்தாலோசித்து போட்டியில் திறம்பட செயற்படுவோம்” என தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg