Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கமல்ஹாசனை நான் எதிர்க்கவில்லை: பொன்.இராதாகிருஷ்ணன்

In இந்தியா
Published: 05:05 GMT, Jul 21, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Surenth
Kamal Hasan Pon.Radhakrishnan

ஆர்.கே. நகர் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து தான் போட்டியிடப்போவதில்லை என மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவது, தொடர்பில் மதுரை விமான நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “நடிகர் கமல்ஹாசன் எந்த சிந்தனையில் தற்போது கருத்து கூறி வருகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. பார்திய ஜனதா கட்சி ரஜினிக்கு ஆதரவாகவும், கமலுக்கு எதிராகவும் கருத்துக்களை கொண்டுள்ளது. அது உண்மைதான்.

கமல்ஹாசன் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் நான் இதுவரை எதுவும் பேசவில்லை. இதனால் அதுபற்றி எந்த விதமான கருத்தும் சொல்ல முடியாது.

கமல்ஹாசனுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தி.மு.க. தற்போது எல்லாவற்றையும் இழந்த நிலையில் உள்ளனர். இந்த நிலையில், ஏதாவது ஒரு கொடிமரத்தை பிடித்து ஏறிவிடலாம் என அவர்கள் நினைக்கின்றனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டால் பாரதிய ஜனதா கட்சி எதிர்த்து களம் இறங்குவது தொடர்பில் தற்போதைக்கு எந்த தீர்மானமும் இல்லை. இந்த நிலையில் அந்த தொகுதியில் நானும் போட்டியிடவில்லை.” பொன்.இராதாகிருஷ்ணன் அவர் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg