Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணிக்கெதிரான தொடர் மிக முக்கியமானது: ரவிசாஸ்திரி

In கிாிக்கட்
Published: 05:29 GMT, Jul 21, 2017 |
0 Comments
1527
icon_com
This post was written by : Anojkiyan

கிரிக்கெட் வாழ்க்கையில், தனக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்புக்கள் அனைத்துமே இலங்கையுடன் என்பதால் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கெதிரான தொடர் மிக முக்கியமானதென இந்தியக் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நான் 18 வயதில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து முதலாவது போட்டியை இலங்கை மண்ணிலேயே விளையாடினேன். அதேபோன்று கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக வந்தபோது அதுவும் 1994ஆம் ஆண்டளவில் முதல் போட்டிக்கான வர்ணனையை இலங்கை மண்ணிலேயே ஆரம்பித்தேன்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக பொறுபேற்றதன் பின் இலங்கை மண்ணில் இடம்பெறவுள்ள போட்டியிலேயே எனது பயிற்றுவிப்பாளருக்கான பணியை நிறைவேற்றவுள்ளேன் என இத்தொடர் எனக்கு முக்கியம் வாய்ந்தது” என கூறினார்.

இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு ரி-ருவென்ரி போட்டி ஆகியன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg