Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் வறட்சி நிலையைத் தீர்ப்பதற்கு நீண்டகால செயற்திட்டங்கள்!

In இலங்கை
Published: 05:31 GMT, Jul 21, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Ravivarman
arura

யாழ் மாவட்டத்தில் நிலவும் வறட்சி நிலையைத் தீர்ப்பதற்கு நீண்டகால செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

யாழிற்கு விஜயம் செய்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், மாவட்டத்தின் வறட்சி நிலை தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குடிநீர்த் தேவையுள்ள பகுதிகளிற்கு குடிநீர் வழங்கும் பொருட்டு மேலதிகமாக தண்ணீர் பௌசர்கள் மற்றும் 500 தண்ணீர் தாங்கிகள் அவசரமாக தேவைப்படுகின்றன.

இவ்வனர்த்த நிலைமைகளினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தேவையான நஷ்டஈடுகள் வழங்க அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை உடனடியாகத் தாக்கல் செய்து தேவையான நிதியைப் பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg