Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய விவகாரத்தில் ஜப்பானுக்கு தோள்கொடுப்போம்: பொரிஸ் ஜோன்சன்

In
Published: 06:20 GMT, Jul 21, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Elakkiya

வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அபிவிருத்தி திட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஜப்பானுடன் இணைந்து பிரித்தானியா செயற்படும் என பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பான் சென்றுள்ள பொரிஸ் ஜோன்சன், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஃபுமியோ கிஷிடா உடனான செய்தியாளர் சந்திப்பில் பொரிஸ் ஜோன்சன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை தொடர்ச்சியாக மீறும் வடகொரியாவின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்பதில் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்த தெரிவித்த ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் கிஷிடா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னரும் பிரித்தானியாவை உள்ளடக்கிய ஐக்கிய ஐரோப்பாவுடனான ஒத்துழைப்புக்களை உறுதிசெய்வதாக ஜோன்சன் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg