Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2 மணி நேரத்துக்குள் டெங்கு பரிசோதனைப் பெறுபேறு: பிரதமர் உத்தரவு!

In இலங்கை
Published: 06:07 GMT, Jul 21, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Ravivarman
ranil-japan-720x480

டெங்கு நோயினைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் இரத்தப் பரிசோதனையின் பெறுபேறுகளை 2 மணி நேரத்துக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனியார் வைத்தியசாலைகளிற்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற சுகாதார அதிகாரிகளின் மீள்பரிசீலனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரச வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை அறிக்கைகளை வழங்குவதற்கு 90 நிமிடங்களே செலவிடப்படுகின்றன. ஆனால், தனியார் மருத்துவமனைகள் இதற்காக 8 மணித்தியாலங்களை எடுக்கின்றன.

நோயாளர்களின் அவசரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு குறித்த பரிசோதனைகளின் நேரத்தை தனியார் மருத்துவமனைகள் குறைத்துக் கொள்ளவேண்டும்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg