Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மட்டத்தை அதிகரிக்க நிதியுதவி

In இலங்கை
Updated: 07:16 GMT, Jul 21, 2017 | Published: 07:07 GMT, Jul 21, 2017 |
0 Comments
1159
This post was written by : Risha

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பின்தங்கிய மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் தன்னார்வ அமைப்பொன்றினால் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டதாக இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதி எம்.தவராஜ் தெரிவித்துள்ளார்.

மத்தியகிழக்கு நாடுகளில் தொழில்புரியும் புதூர் மற்றும் அதனை அண்டிவாழும் ஐந்து கிராங்களைச் சேர்ந்த அன்பர்களின் பரோபகார நிதிப் பங்களிப்பின் மூலம் இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த காசோலை கையளிக்கும் நிகழ்வில், பாடசாலை அதிபர் கே.பாஸ்கரன் மற்றும் இணைந்த கரங்கள் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Puthur school (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg