Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்னும் 2 வாரத்திற்குள் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும்: டளஸ்

In இலங்கை
Published: 07:01 GMT, Jul 21, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Ravivarman
Dullas-Alahapperuma1-720x480

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இன்னும் இரு வாரங்களில் இழக்கப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே நேற்றையதினம் (வியாழக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்துக்குள் இருக்கும் நெருக்கடி நிலைமையை மறைக்க வேறுவேறு விதமான பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர்கள் வெளியேறுவதற்கு டிசம்பர் வரை காத்திருக்க வேண்டியதில்லை. செப்ரெம்பர் 2 உடன் வெளியே வரலாம்.

இந்த அரசாங்கத்துக்குள் ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர்கள் தொடர்ந்தும் இருந்தால், யானை விழுங்கிய விளாம்பழம் போன்றுதான் இருப்பார்கள்” என டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg