Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது தென்கொரியா

In உலகம்
Published: 07:32 GMT, Jul 21, 2017 |
0 Comments
1216
icon_com
This post was written by : Elakkiya

கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை எளிதாக்க வேண்டுமாயின் வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள தென்கொரியா பேச்சுவார்த்தைக்கான தமது கோரிக்கைக்கு வடகொரியா பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தென்கொரிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மூன்-சாங்-க்யூன் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது, கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கும் ஸ்திரதன்மைக்கும் இராணுவப் பகுதியில் பேச்சுவார்த்தை மீள நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் தெற்கு மற்றும் வடக்குக்கு இடையில் இராணுவ பதற்றங்களை எளிதாக்குவதற்கு பேச்சுவார்த்தை மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை தொடர்ச்சியாக மீறிவரும் வடகொரியா சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே விளங்குகின்றது. அதற்கேற்ப மிக நீண்டதூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை இம்மாத ஆரம்பத்தில் வடகொரியா வெற்றிகரமாக சோதனையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg