Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்பு அணுகுமுறையை சகித்துக்கொள்ளாத ஆஸி பயிற்சியாளரே சிறந்த பயிற்சியாளர்: கிப்ஸ் கருத்து

In கிாிக்கட்
Published: 07:47 GMT, Jul 21, 2017 |
0 Comments
1226
icon_com
This post was written by : Anojkiyan
gibbs

நட்பு அணுகுமுறையை சகித்துக்கொள்ளாத அவுஸ்ரேலிய பயிற்சியாளர்களே தென்னாபிரிக்க அணிக்கு சிறந்த பயிற்சியாளர்கள் என தென்னாபிரிக்க அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஹெர்ஸ்செல் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோவின் பதவிக்காலம் ஒகஸ்ட் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே கிப்ஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”அவுஸ்ரேலிய பயிற்சியாளர்கள் முட்டாள்தனத்தோடு செயல்படமாட்டார்கள். புதிய அணுகு முறையை நான் விரும்புகிறேன். சில புதிய விடயங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. அவர்களால்தான் சாதிக்க முடியும்.

அணி பயிற்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அணியை வைத்துக் கொள்வது தேவையானது. தென்னாபிரிக்க அணியில் உள்ள சில வீரர்கள், பயிற்சியாளருடன் மிகவும் நெருங்கிய நட்பு வைத்துள்ளனர். இது முட்டாள்தனமானது. நண்பன் – நண்பன் அணுகுமுறையை சகித்துக்கொள்ளாத அவுஸ்ரேலிய பயிற்சியாளர், தென்னாபிரிக்க அணிக்கு பணியாற்ற முடியும் என்பதே எனது நம்பிக்கை” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg