Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திரக் கட்சியில் இருந்து யாரும் வெளியேற மாட்டார்கள்: துமிந்த

In இலங்கை
Published: 08:00 GMT, Jul 21, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Ravivarman
duminda-1-415x260

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவரும் வெளியேற மாட்டார்கள் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தனியாக கட்சியொன்றினால் நடைமுறைப்படுத்த முடியாமல் போனதை இன்று பிரதான இரண்டு கட்சிகள் இணைந்து நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்பைச் செய்துள்ளன.

கட்சியின் ஒருமித்த தீர்மானத்தின்படி எவரும் கட்சியை விட்டு வெளியேறும் நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை. நாட்டின் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில் உறுப்பினர்கள் எவரும் இவ்வாறான வெளியேறும் நட வடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள்.

சாதாரணமாக குடும்ப வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவை வீட்டிற்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டும்” என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg