Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உமா ஓயா பிரதான சுரங்கத்தின் நீர்க்கசிவினை நிறுத்த துரித நடவடிக்கைகள்!

In இலங்கை
Published: 09:50 GMT, Jul 21, 2017 |
0 Comments
1304
icon_com
This post was written by : Ravivarman
Uma-Oya-Hydropower

நோர்வே நாட்டு விசேட நிபுணரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கேற்ப பிரதான சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவினை அடைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பில் இலங்கைக்கு வருகை தந்த சுவிட்ஸர்லாந்து நாட்டு நிபுணரின் ஆலோனைகளுக்கமைய சுரங்க அகழ்வு இயந்திரத்திற்கு பொருத்தப்படவேண்டிய பாகம், அவ்வியந்திரத்தை நிர்மாணித்த ஜேர்மன் நிறுவனத்தினால் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் இரு நாட்களுக்குள் குறித்த பாகம் தேவை ஏற்பட்டுள்ள பகுதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாகம் பொருத்தப்பட்டதன் பின்னர் தேவையான மாற்றங்களை செய்வதற்காக குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளும் நாட்டிற்கு ஏற்கனவே வருகை தந்துள்ளனர்.

சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக சுரங்கத்தின் இறுதி முடிவிடத்திலிருந்து 4 கிலோமீற்றருக்குள் பெறப்படும் ஊற்றுநீரை குழாய் மூலமாக சுரங்கத்திற்கு வெளியே கொண்டுவந்து அப்பிரதேச மக்களுக்கு நீர் கொள்கலன்களின் மூலமாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் (120,000) லீற்றர் நீர் இவ்வாறு வழங்கப்படுவதுடன், இந்த அளவானது எதிர்வரும் வாரத்திற்குள் நாளாந்தம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் (250,000) லீற்றர்களாக அதிகரிக்கப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg