Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியில் ஜேர்மனியின் முதலீடுகளுக்கு உத்தரவாதம் உண்டு: பொருளாதார அமைச்சர்

In ஐரோப்பா
Updated: 10:39 GMT, Jul 21, 2017 | Published: 10:39 GMT, Jul 21, 2017 |
0 Comments
1244
This post was written by : Elakkiya

ஜேர்மனியின் முதலீடுகளுக்கு துருக்கிய அரசாங்கமும் நாட்டின் சட்டங்களும் முற்றுமுழுதான உத்தரவாதம் வழங்கியுள்ளதாக துருக்கி பொருளாதார அமைச்சர் நிஹத் ஷெய்பேக்சி (Nihat Zeybekci)   தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த வருடம் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியுடன் தொடர்புடையன என சந்தேகிக்கப்படும் ஜேர்மனிய நிறுவனங்களின் பட்டியலை அங்காரா, பேர்லினிடம் வழங்கியுள்ளது என்ற ஊடக தகவல்களையும் மறுத்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, தற்போது ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள பதற்றம் தற்காலிகமானது என்றும் இருதரப்பினரும் நீடித்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் பேச்சுக்களிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜேர்மனிய மனித உரிமை ஆர்வலர் துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கியில் ஜேர்மனிய நிறுவனங்களின் முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று ஜேர்மனி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், துருக்கி பொருளாதார அமைச்சர் மேற்படி கருத்து வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg