Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் தலைதூக்கியுள்ளதா வெள்ளைவேன் கடத்தல்?

In இலங்கை
Published: 11:21 GMT, Jul 21, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Puvanes

மருத்துவ பீட மாணவ சங்கத்தின் தலைவரை கடத்துவதற்கு முயற்சி செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட வெள்ளை வேன் கலாச்சாரமானது தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்றதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹரித குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் மருத்துவபீட மாணவ சங்கத் தலைவரை வெள்ளை வேன் மூலமாக கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு கடுமையாக எதிர்ப்பினை வெளியிடுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கடத்தலுடன் தொடர்புபட்டவர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு அடையாளம் காட்டிய ஹரித, அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்களை தூண்டி விட்டவர்கள் யார்? போன்ற விடயங்களை பொலிஸாரும், அரசாங்கமும் விரைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் பாரிய தொழிற்சங்க போராட்டத்தினை அரசாங்கம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்ததோடு, இவ்வாறான முறைகேடான செயல்களை இனிமேலும் அனுமதிக்க மாட்டோம் எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg