Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விற்பனை செய்த அனைத்து கார்களையும் திரும்பப் பெறுகிறது பென்ஸ் நிறுவனம்!

In வணிகம்
Published: 12:08 GMT, Jul 21, 2017 |
0 Comments
1528
icon_com
This post was written by : Anojkiyan
merz

முன்னணி கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளில் தான் தயாரித்து விற்பனை செய்த அனைத்து கார்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. டீசல் ரக கார்களின் உமிழ்வை மேம்படுத்துவதற்காகவே இந்நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதை செய்து முடிக்க மொத்தம் 220 யூரோ மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது எனினும் வாடிக்கையாளர்களிடம் எவ்வித பணமும் வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் இன்ஜின் கொண்ட அனைத்து கார்களும் யூரோ 6 தரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதால் புதிய மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

எனினும் ஜேர்மனியில் மட்டும் 10 லட்சம் வாகனங்களும், ஐரோப்பாவில் 20 லட்சம் வாகனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு லண்டனில் மட்டும் 170,000 புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg