Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனோர் சட்டமூலம் நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும்: சிங்கள ராவய

In இலங்கை
Updated: 12:41 GMT, Jul 21, 2017 | Published: 12:41 GMT, Jul 21, 2017 |
0 Comments
1194
This post was written by : Ravivarman

காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பிலான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளமை தேசிய பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலாகும் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.

ராஜகிரிய சத்தர்மாராஜித விகாரையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குறித்த சட்டமூலம் தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையினையும் புலம்பெயர் அமைப்புக்களையும் திருப்திப்படுத்தவே மேற்படி அலுவலகம் அமைக்கப்படுகின்றது.

இதன்மூலம் நாட்டினது பாதுகாப்பு நடைமுறைகளுக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதுடன், தேசிய பாதுகாப்பும் பாதிக்கப்படும்” என மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg