Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் பொலிஸ் நடமாடும் சேவை!

In இலங்கை
Published: 15:37 GMT, Jul 21, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Vithushagan
DSC_0011

மன்னார் பட்டித்தோட்டம் கிராமத்தில் பொலிஸ் நடமாடும் சேவையினை வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்றிகோ தலைமையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்தோட்டம் சன சமூக நிலையத்தில் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடமாடும் சேவை இன்று தொடக்கம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

குறித்த பொலிஸ் நடமாடும் சேவையினூடாக 24 மணிநேர சேவையின் மூலம் தமது அவசர தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதற்கு இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இடம்பெறும்.

குறித்த நமாடும் சேவையினூடாக ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்களை பூரண பயனடையுமாறு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்றிகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DSC_0016 DSC_0054

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg