Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ப்ளு ஸ்டாருடன் இணைந்து கம்ஃபோர்ட் சொலுயூஷன்ஸ் தரும் அறிமுகம்

In வணிகம்
Updated: 06:10 GMT, Jul 22, 2017 | Published: 06:08 GMT, Jul 22, 2017 |
0 Comments
1653
This post was written by : Surenth

இந்தியாவின் முன்னோடி ஏயார்கண்டிஷனர் மற்றும் குளிர்சாதன நிறுவனமான ப்ளு ஸ்டார் நிறுவனமானது, தனது தனித்துவமான தயாரிப்புக்களான அறை காற்றுசீரமைப்பிகள் (ஏயார்கண்டிஷனர்), கேசட் அறைகாற்று சீரமைப்பிகள், தரைநிலை அறைகாற்று சீரமைப்பிகள், நீர் குளிர்விப்பான்கள், டீப் ஃப்ரீசர்ஸ், போத்தலில் அடைக்கப்பட்ட நீர் விநியோகிகள் மற்றும் ஐஸ் க்யூப் இயந்திரங்கள் உள்ளடங்கலான தயாரிப்புக்களின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக கம்ஃபோர்ட் சொலுயூஷன்ஸூடனான அதன் கூட்டு பங்கை அறிவித்துள்ளது.

தற்போதைய இலங்கை AC&R:
சந்தையானது வருடாந்த 15% வளர்ச்சியுடன் அமெரிக்கன் டொலர் 50 மில்லியன் மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையானது மேல் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடாக மாற்றம் பெறுவதை நோக்கி செல்கின்றமையினால் அதன் தற்போதைய இலக்கானது அதனது நீண்டகால தந்திரோபாயங்கள் மற்றும் கட்டமைப்பு அபிவிருத்தியில் தங்கியிருக்கின்றது.

நகரங்களின் மேம்பாடு மற்றும் விரிவாக்கங்களிற்காக கணிசமான அளவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் விருந்தோம்பல், கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற துறைகளிற்காக அரச மற்றும் தனியார் ரீதியான பல மெகா செயற்றிட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வளர்ந்துவரும் குடியிருப்புமனைகள் உள்ளடங்களாக இந்தத் துறைகளாவன ஏயார் கண்டிஷனிங் மற்றும் குளிர்சாதன உற்பத்திக்கான கோரிக்கையை அதிகரிக்கின்றன. இந்தியாவில் கிட்டத்தட்ட 75 வருடங்களாக ஏயார் கண்டிஷனிங் மற்றும் குளிர்சாதனத் துறையில் தலைமைத்துவம் வகிக்கும் ப்ளு ஸ்டார் நிறுவனமானது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினால் (ISFTA) ஆதரவு அளிக்கப்படுவதுடன் இரு நாடுகளிற்கிடையிலான நெருங்கிய, செலவு குறைந்த மற்றும் வேகமான போக்குவரத்தானது, இந்நிறுவனம் நாட்டிற்குள் காலடி எடுத்து வைப்பதற்கான வழிகளை இலகுவாக்குகின்றது.

ப்ளு ஸ்டார் நிறுவனமானது கம்ஃபோர்ட் சொலுயூஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சூழலிற்குகந்த எரிசக்தி திறன் கொண்ட அறை ஏயார் கண்டிஷனர்கள் மற்றும் கேசட் ஏயார் கண்டிஷனர்களை வழங்குவதுடன் இவ்விரண்டும் நிலையான வேகம் மற்றும் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் கொண்டவையாக காணப்படுகின்றன. அத்துடன் இந்நிறுவனமானது தரைநிலை ஏயார் கண்டிஷனர்களையும் வழங்குவதுடன் இலங்கையில் குடியிருப்பு மற்றும் வர்த்தகத் துறைகளின் ஒவ்வொரு தொடர்படைய தேவைகளிற்கும் தனது சேவைகளை வழங்குகின்றது.

ப்ளு ஸ்டார் நிறுவனமானது தனது இந்திய தயாரிப்பான ஸ்பிளிட் ஏயார் கண்டிஷனர்களை அறிமுகப்படுத்துவதுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின (ISFTA) கீழ் எந்தவிதமான கடமை தாக்கங்களும் இன்மையானது இதன் கட்டுப்படியான விலையை நிர்ணயிக்கின்றது. அறை ஏயார் கண்டிஷனர்கள் தவிர, இந்நிறுவனமானது நீர் குளிர்விப்பான்கள், டீப் ஃப்ரீசர்ஸ், போத்தலில் அடைக்கப்பட்ட நீர் விநியோகிகள் மற்றும் ஐஸ் க்யூப் இயந்திரங்கள் உள்ளடங்கலாக தனது குளிர்சாதன தயாரிப்புக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் முக்கிய கவனத்தை செலுத்துவதுடன் வர்த்தக துறைகளின் எந்தவிதமான குளிர்சாதன தேவைகளையும் நிறைவேற்ற எதிர்பார்க்கின்றது.

ப்ளு ஸ்டார் நிறுவனமானது இந்தியாவில் அமைந்துள்ள தனது தலைமைக்காரியாலயத்தில் இலங்கை சந்தையை கையாளும் வகையிலான அர்ப்பணிப்புடன் நிபுணக்குழுவையும் உள்ளூர் விற்பனைக் குழுவையும் கொண்டுள்ளது. இச்சந்தையில் ப்ளு ஸ்டார் ப்ரேண்ட் உற்பத்திகளை கட்டியெழுப்பும் முகமாக பல தனிப்பயனாக்கப்பட்ட விளம்பர பிரசாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ப்ளு ஸ்டார் நிறுவன சர்வதேச வியாபாரக் குழுவின் தலைவரான திரு. தாவூத் பின் ஓஸைஸர் அவர்கள் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றுகையில் ‘ப்ளு ஸ்டார் நிறுவனமானது இலங்கை முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்களிற்கு துறை முன்னோடி தயாரிப்புக்களை வழங்கும் பொருட்டு, உயர் அளவிலான மதிப்புப் பெற்ற தொழில் நிறுவனமான கம்ஃபோர்ட் சொலுயூஷன்ஸ் உடன் கூட்டுறவை ஏற்படுத்துவது குறித்து பெருமையடைகின்றது. ஏழு தசாப்தங்கள் முழுவதுமான அனுபவத்தைக் கொண்டுள்ள ப்ளு ஸ்டார் நிறுவன தயாரிப்புக்கள் வலுவான R&D மற்றும் உலக தர உற்பத்தி செயன்முறையைக் கொண்டுள்ளன. கம்ஃபோர்ட் சொலுயூஷன்ஸ் நிறுவனத்தின் சில்லறை மற்றும் விற்பனையாளர்களுடனான நன்கு பரந்த விநியோக வலைப்பின்னலானது, இலங்கையில் எமது தனித்துவமான தயாரிப்புக்களிற்கான விரிவாக்கத்தை உறுதிப்படுத்தும் என நாம் நம்புகின்றோம்.’ என்று குறிப்பிட்டார்.

‘ஏயார்கண்டிஷனர் மற்றும் குளிர்சாதன நிபுணத்துவம் பெற்ற ப்ளு ஸ்டார் நிறுவனத்துடன் கூட்டுறவை ஏற்படுத்துவது குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் நீண்ட கால வெற்றிகரமான உறவொன்றை நாம் எதிர்பார்க்கின்றோம். இலங்கையின் வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் வர்த்தகத்துறையை இலக்காகக் கொண்டு திறனான தயாரிப்புக்கள் மற்றும் தீர்வுகளை வழங்க எமக்கு ப்ளு ஸ்டார் நிறுவனத்தின் நிபுணக்குழுவானது உதவிபுரியும். புளு ஸ்டாரின் தரமான தயாரிப்புக்கள் மற்றும் கம்ஃபோர்ட் சொலுயூஷன்ஸ் நிறுவனத்தின் விநியோக மற்றும் உட்கட்டமைப்பு சேவைகளுடன் உலக தரம் வாய்ந்த வாடிக்கையாளர் அனுபவத்தை இலங்கையில் வழங்குவது குறித்து நாம் உறுதிகொள்கின்றோம்.’ என்று கம்ஃபோர்ட் சொலுயூஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் உபேக பெரேரா அவர்கள் குறிப்பிட்டார்.

ப்ளு ஸ்டார் குறித்து

ப்ளு ஸ்டார் நிறுவனமானது ஏயார் கண்டிஷனிங், வர்த்தக குளிரூட்டி, மெக்கானிக்கல், மின் மற்றும் குழாய்கள் ஒப்பந்தம் மற்றும் விற்பனைக்கு பின்னரான சேவைகள் போன்ற முக்கிய வியாபாரங்களை உள்ளடக்கிய இந்தியாவின் முன்னோடி பொறியியல் நிறுவனமாக காணப்படுகின்றது. குளிரூட்டி தீர்வுகளை வழங்குவதில் கிட்டத்தட்ட 75 வருடகால அனுபவத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனமானது இந்தியாவில் 35 காரியாலயங்களைக் கொண்ட வலையமைப்மை கொண்டுள்ளதுடன் 17 நாடுகளில் இயங்கி வருவதுடன் 5 நவீன உற்பத்தி வசதிகள் மற்றும் 2700 நேரடி தொழிலாளர்களையும் அமெரிக்க டொலர் 680 மில்லியன் வருடாந்த விற்றுமுதலையும் கொண்டுள்ளது.

பாரிய அளவிலான கூட்டுறவு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு வாடிக்கையாளர்கள் என்பனரின் குளிரூட்டி கோரிக்கைகளை ப்ளு ஸ்டார் நிறுவனமானது நிறைவேற்றுகின்றது. இதனது ஏயார் கண்டிஷனிங் தயாரிப்புக்களாவன அறை ஏயார் கண்டிஷனர்கள், வெவ்வேறு குளிரூட்டி அமைப்புக்கள், மல்டி-ஸ்பிளிட் இன்வேர்டர் ஏயார் கண்டிஷனர்கள், பக்கேஜ்ட் ஏயார் க்டிஷனர்கள், ஏயார் ஹண்டிலிங் யுனிட்ஸ், விசிறி சுருள் அலகுகள் மற்றும் HVAC சில்லர்ஸ் என்பவற்றை உள்ளடக்குகின்ற அதேநேரத்தில் குளிரூட்டி தயாரிப்புக்கள் நீர் குளிர்விப்பான்கள், டீப் ஃப்ரீசர்ஸ், போத்தலில் அடைக்கப்பட்ட நீர் விநியோகிகள் மற்றும் ஐஸ் க்யூப் இயந்திரங்கள், மட்டு குளிர் அறைகள், குளிர் அறை குளிர்பதன அலகுகள் மற்றும் ரைப்பனிங் சேம்பர்ஸ் போன்றவற்றை உள்ளடக்குகின்றன.

ப்ளு ஸ்டார் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக குழுக்களைக் குறித்து

ப்ளு ஸ்டார் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக குழு நிறுவனமானது தனது உலகளாவிய தயாரிப்ப விற்பனை பிரிவின் மூலமாக சகல ஏயார் கண்டிஷனிங் மற்றும் குளிரூட்டி தயாரிப்புக்களிற்கான வியாபார நடவடிக்கைகளை இந்தியா நாட்டின் எல்லைகளிற்கு அப்பால் முன்னெடுத்துச் செல்லும் இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்புடனான வணிக நெம்புகோலாகும். இந்தப் பிரிவானது மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, சார்க் மற்றும் ஆசியா பிராந்திய சந்தைகளிலும் தயாரிப்புக்களின் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது முன்னணி விநியோகஸ்தர்களுடன் இணைந்து, ஒரு தீவீர விரிவாக்கத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ளு ஸ்டாரின் இன்டர்நஷனல் ப்ரோஜக்ட்ஸ் பிஸ்னஸ் க்ருப்பானது கட்டார், மலேசியா மற்றும் ஓமான் போன்ற நாடுகளில் கூட்டு முயற்சியில் இயங்குவதுடன் குடியிருப்பு, வர்த்தக மற்றும் தொழிற்துறை பிரிவுகளிற்கான HVAC&R மற்றும் MEP திட்டங்களில் கவனம் செலுத்துகின்றது.

கம்ஃபோர்ட் சொலுயூஷன்ஸ் பற்றி

இலங்கையில் ஏயார் கண்டிஷனிங் மற்றும் குளிரூட்டி தயாரிப்புக்களிற்கான விஷேடத்துவம் பெற்ற முன்னோடி நிறுவனமாகும். இலங்கை முழுவதும் அலகுசார் தயாரிப்புக்களின் விநியோகம் மற்றும் சேவைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நவீன தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக காணப்படுகின்றது. இலங்கையில் குளிரூட்டல் மற்றும் குளிர்சாதன பொருட்களிற்கான எந்தவொரு கோரிக்கையையும் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற திறமையான மற்றும் நம்பகமான விற்பனைக்கு பின்னரான சேவை உட்கட்டமைப்பை இந்நிறுவனமானது கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களிற்கு தயவு செய்து ப்ளு ஸ்டார் இன்டர்நஷனல் பிஸ்னஸ் க்ருப் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் சந்தோஷ் சலியனை தொடர்பு கொள்க. மின்னஞ்ஞல்: [email protected] தொலைபேசி இல: +91 22 66544000 கையடக்கத் தொலைபேசி: +91 9819738468

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg