Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு செயலாளர் இராஜினாமா

In
Published: 04:33 GMT, Jul 22, 2017 |
0 Comments
1342
icon_com
This post was written by : Sylviya

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு  செயலாளர் ஷோன் ஸ்பைசர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றினால் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட செவ்வியில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் புதிய தகவல் தொடர்பு இயக்குனராக அந்தோனி என்பவர் நியமிக்கப்பட்டதாகவும் அது தொடர்பில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே ஸ்பைசர் பதவி விலகியதாகவும் இவ்விடயம் தொடர்பில் வெளியாகிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்த ஸ்பைசர், தான் மேற்கொண்ட கருமங்களை வேறு ஒருவரிடம் கையளிக்கும் வரை வெள்ளை மாளிகையில் இருப்பார் என தெரிவித்துள்ளார்.

அதன் படி, சில வாரங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகக் குழுவுடன் ஸ்பைசர் ஒத்துழைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ட்ரம்பின் வழிகாட்டலின் கீழ் தான் பணியாற்றியமை குறித்து பெருமையடைவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg