Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்: ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஆறுகுட்டி திடீர் விலகல்

In இந்தியா
Updated: 04:50 GMT, Jul 22, 2017 | Published: 04:48 GMT, Jul 22, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Risha
aru

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவரது அணியில் முதலில் இணைந்துக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, ஓ.பி.எஸ். அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தன்னை ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து புறக்கணித்து வருகின்ற நிலையிலேயே ஓ.பி.எஸ். அணியிலிருந்து விலக தீர்மானித்ததாக கோவையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஓ.பி.எஸ். தன்னை அழைக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டதாகவும், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆறுக்குட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

ஓ.பி.எஸ். அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியில் இணைவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஆறுக்குட்டி விலகியுள்ள நிலையில், அந்த அணியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11ஆகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg