Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாரையும் இயக்க வேண்டிய அவசியமில்லை: கனிமொழி

In இந்தியா
Updated: 06:01 GMT, Jul 22, 2017 | Published: 06:01 GMT, Jul 22, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Risha
kanimozhi

யாரையும் இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு இல்லை என்று தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் பற்றி பேசும் கமல்ஹாசன், தி.மு.க. ஆட்சியின் ஊழல் குறித்து பேசாதது ஏன் என கேள்வி எழுந்துள்ள நிலையில், தி.மு.க.வே கமல்ஹாசனை இயக்கிவருகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே கனிமொழி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”தி.மு.க. மாபெரும் இயக்கம். இந்த இயக்கத்துக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு வேறு யாரும் தேவை இல்லை.

நடிகர் கமல்ஹாசன் மற்றவர்கள் இயக்கி இயங்கக் கூடியவர் இல்லை. யாரையும் இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கும் இல்லை. இத்தனை ஆண்டுகாலமாக தி.மு.க. யாருடைய உதவியும் இல்லாமல் தான் செயல்பட்டு வருகிறது” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg