Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர் வகேலா விலகல்

In இந்தியா
Updated: 06:24 GMT, Jul 22, 2017 | Published: 06:24 GMT, Jul 22, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Risha
shankersinh-vaghela-at-rally-pti_650x400_61500636798

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷங்கர்சிங் வகேலா, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

தனது பதவி விலகல் குறித்து மேலும் தெரிவித்த அவர், ”நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து 24 மணிநேரத்துக்கு முன் நீக்கப்பட்டேன்.

அதன்படி, நான் தற்போது வகித்துவரும் குஜராத் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுகிறேன். அடுத்த மாதம் 8ஆம் திகதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்குப் பின் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப் போகிறேன்.

காங்கிரஸில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். என்னிடம் இருந்து காங்கிரஸையும் விடுவித்துள்ளேன். நான் பா.ஜ.க.வில் மீண்டும் இணைய மாட்டேன். வேறு எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். எனினும், அரசியலிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் எனக்கு இல்லை” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg