Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தையா முரளிதரன் இன்று வரலாற்றில் இடம்பிடித்த நாள்

In கிாிக்கட்
Updated: 06:55 GMT, Jul 22, 2017 | Published: 06:53 GMT, Jul 22, 2017 |
0 Comments
1606
icon_com
This post was written by : Elakkiya
received_10213475040139952-1

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீரரும் சாதனை நாயகனுமாகிய முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கட் அரங்கில்  800 விக்கெட்களை கைப்பற்றி வரலாற்றில் இடம்பிடித்த நாள் இன்றாகும்.

கடந்த 2010 ஆம் ஆண்டு காலி மைதானத்தில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டது.

அன்றைய தினம் இந்திய அணியின் சார்பில் துடுப்பெடுத்தாடிய பிரக்ஜன் ஓஜாவின் விக்கெட்டே முத்தையா முரளிதரனின் டெஸ்ட் போட்டிகளில் 800 ஆவது விக்கெட்டாக அமைந்தது.

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற இமாலய சாதனையுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்றிருந்தார்.

18 வருடகால டெஸ்ட் வாழ்க்கையில், இமாலய சாதனையுடனான அவருடைய ஓய்வு இலங்கை கிரிக்கட் இரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட ஒன்று என்பதுடன் இன்றும் நினைவில் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg