Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரி இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும்: ராமதாஸ்

In இந்தியா
Updated: 07:05 GMT, Jul 22, 2017 | Published: 07:04 GMT, Jul 22, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Risha
Anbumani

ஜல்லிக்கட்டுக்காக போராடியது போல், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்குமாறு கோரி இளைஞர்கள் களத்தில் இறங்கி போராட வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விற்கு விலக்கு அளிக்குமாறு கோரி சென்னை, சேப்பாக்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டமூலங்களுக்கு மத்திய அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு தவறி விட்டது.

இதனால் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்த 4.2 லட்சம் மாணவர்களுக்கான 85 சதவீத இடங்கள் மருத்துவக் கல்லூரியில் பறிபோயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg