Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய வீரர் பர்விந்தர் அவானா மீது தாக்குதல்

In கிாிக்கட்
Updated: 08:00 GMT, Jul 22, 2017 | Published: 07:59 GMT, Jul 22, 2017 |
0 Comments
1278
This post was written by : Elakkiya

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இந்திய வீரர் பர்விந்தர் அவானா மீது ஐவர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலையிட முயன்றபோது அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பர்விந்தர் அவானாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

31 வயதாக பர்விந்தர் அவானா இந்திய அணிக்காக இரண்டு சர்வதேச ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காகவும் பங்கேற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி, உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg