Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

In இலங்கை
Published: 10:21 GMT, Jul 22, 2017 |
0 Comments
1254
icon_com
This post was written by : Ravivarman
WhatsApp Image 2017-07-21 at 5.44.43 PM

முல்லைத்தீவு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமமான புத்துவெட்டுவான் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

ஒரு குடும்பத்திற்கு 25000 ரூபாய் பெறுமதி அடிப்படையில் தையல் இயந்திரங்கள், நீரிறைக்கும் இயந்திரங்கள் மற்றும் கால்நடைகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.

புத்துவெட்டுவான் பகுதியில் வசிக்கும் வேலாயுதம் சிவநிதன் என்பவரின் தனிப்பட்ட நிதியில் இருந்து குறித்த மக்களுக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலாளர், ஐயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி, புத்துவெட்டுவான் கிராமசேவகர் என பலர் கலந்து கொண்டு மக்களுக்கான உதவிகளை வழங்கிவைத்தார்கள்.

WhatsApp Image 2017-07-21 at 5.44.46 PM WhatsApp Image 2017-07-21 at 5.44.45 PM WhatsApp Image 2017-07-21 at 5.44.45 PM(1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg