Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: ஜனாதிபதி உறுதி!

In இலங்கை
Published: 10:53 GMT, Jul 22, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Ravivarman
4_V_Pres

நாட்டின் கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

கிரிந்திவலையில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ சீலரத்ன நாயக்க தேரர் நினைவு மண்டபத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இதுவரையில் எந்த அரசாங்கமும் கழிவுப் பிரச்சினை தொடர்பாக முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நாட்டில் எங்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது சர்வதேச உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளின் அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில் கழிவுப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்” என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg