Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

In இலங்கை
Published: 11:43 GMT, Jul 22, 2017 |
0 Comments
1214
icon_com
This post was written by : Puvanes

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் நகரில் பல்கலைக்கழக மாணவர்கள் மூலமாக துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் ஹட்டன் நகரின் வர்த்தக நிலையங்களுக்கும், பொதுமக்களுக்கும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், ஒலிபெருக்கி மூலமாகவும் சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசாங்கம் சைட்டத்தை மூட வேண்டும், கல்வி தனியார் மயப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள், மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் மற்றும் தளபாடங்கள் பற்றாக்குறை போன்றன குறித்தும் விமர்சித்துள்ளனர்.

இதேவேளை, சைட்டம் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

saitam_handbill001 saitam_handbill002 saitam_handbill003 saitam_handbill004 saitam_handbill005

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg