Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் வறட்சி தொடர்பான விசேட கலந்துரையாடல்!

In இலங்கை
Published: 11:43 GMT, Jul 22, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Ravivarman
kilinochchi_meeting004-428x241

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச்செயலக மண்டபத்தில், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மேற்படி கலந்துரையாடலில் கரைச்சி – பூநகரி பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ திணைக்களம், கால்நடை அபிவிருத்தி திணைக்களம், விவசாய திணைக்களம் போன்றவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம், கால்நடை, மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்தின் வறட்சி நிலை தொடர்பில் துறைசர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

kilinochchi_meeting002-428x241 kilinochchi_meeting001-720x450

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg