Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை – இந்திய டெஸ்ட் தொடர் வெற்றியை தீர்மானிக்கப்போகும் ஆடுகளம்!

In கிாிக்கட்
Published: 05:25 GMT, Jul 23, 2017 |
0 Comments
1472
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Ajinkya Rahane, Virat Kohli

பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் ஆடுகளத்தை அமைத்தால் மட்டுமே இலங்கை – இந்திய டெஸ்ட் தொடரில் இலங்கை அணியால் ஆதிக்கம் செலுத்த முடியுமென, இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த போதே கம்பீர் மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.

தொடர் வெற்றிகள் மூலம் தர வரிசையில் முதலிடத்தல் உள்ள இந்திய அணி, தொடரை தமக்கு சாதகமாகவே தொடங்குமென கம்பீர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இலங்கை அணியின் தற்போதைய நிலையில் சென்றால் இந்திய அணிக்கு பந்துவீச்சால் நெருக்கடி கொடுக்க முடியாதென்றும், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மைதானத்தை அமைத்தால் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக 20 விக்கெட்டுக்களை வீழ்த்தும் வகையில் ஆடுகளம் சாதகமாக அமைய வேண்டுமென கம்பீர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg