Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதி மொட்டைத் தலையுடன் மண்டை ஓடுகளை ஏந்தியவாறு விவசாயிகள் போராட்டம்

In இந்தியா
Updated: 07:57 GMT, Jul 23, 2017 | Published: 06:35 GMT, Jul 23, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Puvanes
protest001

டெல்லியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொடர்ந்தும் 7ஆவது நாளாகவும் தமிழக விவசாயிகள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 16ஆம் திகதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் தங்களைத் தாமே செருப்பால் அடித்துக் கொண்டும், துடைப்பத்தால் அடித்துக் கொண்டும் தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து 7ஆவது நாளான நேற்று தலைக்கு பாதி மொட்டை போட்டும், மண்டை ஓடுகள் மற்றும் விச போத்தல்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பிலேயே தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg