Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய வான் பரப்பில் பறந்த 8800க்கும் மேற்பட்ட விமானங்கள்!

In
Updated: 07:15 GMT, Jul 23, 2017 | Published: 07:15 GMT, Jul 23, 2017 |
0 Comments
1151
This post was written by : Anojkiyan

பிரித்தானிய வான் பரப்பில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) மட்டும் 8800க்கும் மேற்பட்ட விமானங்கள் பறந்துள்ளதாக வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 77,000 விமானங்களை கையாள்வதற்கே திட்டமிட்டிருந்த போதும் இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான விமான போக்குவரத்து எனவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 5 சதவீத அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் பிரித்தானிய விமானப் போக்குவரத்து வலையமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய வான் பரப்பில் இவ்வாறு அதிகளவான விமானங்கள் பறப்பது ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து தொடர்பில் மாற்றங்களைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg