Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டு மக்களின் நலனுக்காகவே காணாமல் போனோர் அலுவலகம்: அஜித் பி பெரேரா

In இலங்கை
Updated: 07:08 GMT, Jul 23, 2017 | Published: 07:08 GMT, Jul 23, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Vithushagan
ajith_perera_640x360_ajithpperera

நாட்டு மக்களின் தேவை மற்றும் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுகிறது, சர்வதேசத்தின் தேவையைகளை நிறைவேற்றுவதற்காக அல்ல என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

வானொலி நிகழ்ச்சியொன்றில் நேற்று (சனிக்கிழமை) காலை கலந்து கொண்டபோதே பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” நாட்டின் அனைத்து மக்களுக்கும் பெருமையுடன் வாழக்கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டு மக்களின் தேவை மற்றும் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுகிறது சர்வதேசத்தின் தேவையைகளை நிறைவேற்றுவதற்காக அல்ல.

எதிர்காலத்தில் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறாத வகையில் இருப்பதற்கு இவ்வாறான பொறிமுறை ஒன்று தேவையாக உள்ளது.

இத்தகைய அலுவலகம் ஒன்றை அமைப்பதன் மூலம் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டை சுமத்துவது அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் போன்றவை எந்த வகையிலும் இடம்பெறாது.

இருப்பினும் காணாமல் போனோர் தொடர்பில் என்ன நடந்தது என்பதை அவர்களது குடும்பங்களுக்கு அறிவித்தல், தேவையான நிவாரணத்தை வழங்குவதல் ஆகிய விடயங்கள் இதன்மூலமாக இடம்பெறும்” . என தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg