Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீர் எல்லைப்பகுதியில் மோதல்: தீவிரவாதி சுட்டுக்கொலை

In இந்தியா
Updated: 08:37 GMT, Jul 23, 2017 | Published: 07:55 GMT, Jul 23, 2017 |
0 Comments
1256
icon_com
This post was written by : Puvanes
india_army001

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டர் எனப்படும் பகுதி அருகே இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.

அதனைத் அவதானித்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்தும் எல்லைப் பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையினைச் செவிமெடுக்காது துப்பாக்கிகளால் சுட்டவாறு தீவிரவாதிகள் முன்னேறியதாகவும், இதன் போது இந்தியப்படையினர் எதிர்த்தாக்குதல் செய்ததில் தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg