Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்!

In ஆன்மீகம்
Updated: 11:25 GMT, Jul 23, 2017 | Published: 11:25 GMT, Jul 23, 2017 |
0 Comments
1586
This post was written by : Vithushagan

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை  தீர்த்தோற்சவத் திருவிழா பல்லாயிரக் கணக்கான அடியார்களின் பங்குபற்றுதலுடன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இராமயண போர் நிறைவுபெற்றதும் யுதத்தின்போது போது இராமபிரானால் கொல்லப்பட்டவர்களின் பிதிர்களினால் பிரம்மகத்தி தோசத்தினால் பீடிக்கப்பட்ட இராமன் மாமாங்கம் வந்து தீர்த்தக்கேணியை உருவாக்கி சிவலிங்க வழிபாடு மேற்கொண்டதாகவும் இதன்போது பிதிர் தோசம் நீங்கப்பெற்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

அத்துடன் இராவணேஸ்வரனால் வழிபடப்பட்ட ஆலயமாகவும் நீண்டகால வரலாற்றினைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இறுதி உற்சவமான ஆடி அமாவாசை தீர்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.700.160.90

aa (2) aa (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg