Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசி டயானாவுடனான கடைசி தொலைபேசி உரையாடல் குறித்து மனம் திறந்தார் ஹரி

In
Updated: 14:00 GMT, Jul 25, 2017 | Published: 10:19 GMT, Jul 25, 2017 |
0 Comments
1724
icon_com
This post was written by : Sylviya
12

கபடமற்ற சிரிப்பாலும் நல்லெண்ணத்தாலும் பலர் மனதில் நீங்காத இடம்பிடித்த மறைந்த இளவரசி டயானாவுடன் மேற்கொண்ட கடைசி தொலைபேசி உரையாடல், மிகக் குறுகியதாக அமைந்தது என இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி கவலை வெளியிட்டுள்ளனர்.

இளவரசி டயானா உயிரிழந்து எதிர்வரும் மாதம் 31 ஆம் திகதியுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அவரது வாழ்க்கையை சித்தரித்துக் காட்டும் வகையில் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்படவுள்ளது.

அது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே மேற்படி இளவரசர்கள் இருவரும் கவலை வெளியிட்டுள்ளனர். டயானா உயிரிழக்கும் போது இளவரசர் வில்லியமிற்கு 15 வயது எனவும் இளவரசர் ஹரிக்கு 12 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாய் உயிரிழந்த செய்தியைக் கேள்வியுற்றதும் தான் அடைந்த கவலை குறித்து குறிப்பிட்ட ஹரி, “நான் அடைந்த கவலையை வார்த்தைகளால் குறிப்பிட முடியாது. ஆனால் நான் இரு முறை தான் கண்ணீர் விட்டேன். எனது கவலைகளை என்னுள்ளேயே புதைத்து விட்டேன். அதனால் வெளியே வரவிடாமல் தடுக்கப்பட்ட உள்ளக்குமுறல்கள் என்னுள் உண்டு. நான் அவரிடம் கடைசியாக கதைத்த வார்த்தைகள் மிகக் குறைவு. தொலைபேசி வழியாக அவர் பரிஸில் இருந்து எனக்கு அழைப்பு விடுத்தார். ஒரு சில நிமிடங்கள் மட்டும் உரையாடும் வாய்ப்பே எனக்கு கிடைத்தது. அது தான் நான் அவருடன் கதைக்கும் கடைசி நிமிடம் என்பது எனக்கு அப்போது புரியாமல் போயிற்று” என தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg