Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்குள் காஷ்யப் – பிரணாய்

In டெனிஸ்
Updated: 10:02 GMT, Jul 23, 2017 | Published: 10:00 GMT, Jul 23, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
kashyap n prannoy

அமெரிக்க ஓபன் பெட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றுக்குள், இந்தியாவின் காஷ்யப் மற்றும் பிரணாய் ஆகியோர் நுழைந்துள்ளனர்.

அனாஹியில் நடைபெற்று வரும் இப் போட்டியில், காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப் 21–13, 21–16 என்ற நேர்செட்டில் சக வீரர் சமீர் வர்மாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

அதேபோல், மற்றுமொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரணாய் 10–21, 21–15, 21–18 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரர் கன்டா சுனெயாமாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

இதேவேளை, ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனு அட்ரி–சுமீத் ரெட்டி ஜோடி, 21–18, 22–20 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா–மசாயுகி ஒனோடேரா இணையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg