Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உக்ரைன் பிரச்சினையை தீர்க்க பிரான்ஸ் முனைப்பு

In ஐரோப்பா
Updated: 13:57 GMT, Jul 25, 2017 | Published: 10:59 GMT, Jul 25, 2017 |
0 Comments
1398
This post was written by : Sylviya

உக்ரைனில் நிலவி வரும் மோதலை தீர்க்கும் வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் ரஷ்யா, ஜேர்மனி மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் ரஷ்யா, ஜேர்மனி மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுடன் மக்ரோங் நாளை தொலைபேசி வாயிலாக உரையாடவுள்ளார் என தெரிவித்தது.

பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, உக்ரைன் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மக்ரோன் முயற்சிப்பது இதுவே முதன் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைனிய இராணுவ வீரர்கள் ஆகியோருக்கு இடையில் தொடரும் மோதல் காரணமாக கடந்த சில வாரத்தில் மாத்திரம் 11 உக்ரைனிய இராணுவ வீரர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg